வியாழன், 9 ஏப்ரல், 2009
வித்தியாசமான பாதைகள் பலவற்றை நாம் கண்டுள்ளோம், ஆனால் இலங்கையிலுள்ள மிக பிரசித்தி பெற்ற பாதையொன்று உள்ளது.
அந்த பாதையானது ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ஒவ்வொரு பெரிய வளைவுகளுடன் அமைந்துள்ளது. சுமார் 10 கிலோமீற்றர்களை கொண்ட இந்த பாதையில் பைனஸ் மரங்கள் சூழவுள்ளன. இந்த பாதையில் சிறிய நீர்வீழ்ச்சிகளும் எமக்கு பார்க்க கூடியதாய் இருக்கும். இருப்பினும் இந்த பாதை ஆள்நடமாட்டமில்லாமலேயே இருக்கும்.
எனினும், இந்த பாதையில் காலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை மட்டுமே பயணிக்க முடியும். அதன் பிறகு பயணிப்பவர்களின் உயிரிற்கு உத்தரவாதமில்லை என தான் கூறவேண்டும்.
எனெனில், குறித்த பாதையில் கொலை மற்றும் கொள்ளை ஆகியன இடம்பெறும் ஒரு பகுதி! அதை தவிர மிருகங்களில் இராஜ்ஜியம் அந்த பாதை.
இந்த பாதையை கடந்த சென்றால் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரக்கறி தோட்டங்கள் அமைந்துள்ளன.
இவ்வாறு குறித்த பிரதேசத்தில் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் யாரும் அந்த பாதையில் இரவு வேளையில் செல்ல சற்று தயங்குவார்கள். ஏன் பகலிலும் கூட.
இப்படி, இருக்கும் போது ஒரு நாள் இரவு 10 மணி. ஒருவர் அந்த பாதையில் வேன்னொன்றில் இருவர் மாத்திரம் வந்துள்ளனர்.
எனினும், வாகன சாரதிக்கு இந்த பாதையில் நடக்கும் சம்பவங்கள் பற்றி ஒன்றும் தெரியாது, இருப்பினும், மற்றையவர் அதைபற்றி அறிந்திருந்தார்.
சரியாக 7 கிலோமீற்றர் கடந்த வந்துவிட்டனர். தீடீரென அவர்கள் பயணித்த வேன் யாராவது தள்ளுவது போல் தள்ளுப்பட்டு இயந்திரம் நின்றுவிட்டது.
சாரதிக்கு ஒரே தடுமாற்றம். என்ன இப்படி என. மீண்டும் வாகனத்தை ஸ்டாட் செய்ய வாகனம் ஸ்டாட் ஆகவில்லை.
சரி இறங்கி பார்ப்போம் என அந்த சாரதி கூற, பக்கத்தில் இருந்தவருக்கு இந்த பாதையை பற்றிய அனுபவமுண்டு அல்லவா. வேண்டாம் சற்று இருப்போம் என கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து இருவரும் அந்த வேனிலேயே சுமார் 10 நிமிடங்கள் இருந்து பின்னர் வேனை ஸ்டாட் செய்துள்ளனர்.
அப்போது உடனடியாக ஸ்டாட் ஆகியுள்ளதாம். இவர்கள் வந்து விட்டார்கள்.
சற்று தொலைவில் வந்த சாரதி அருகில் அமர்ந்திருந்தவரிடம் ஏன் அந்த இடத்தில் வேன் நின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர், நேற்றைய தினம் அந்த இடத்தில் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு அந்த இடத்தில் தான் போட்டு விட்டுச் சென்றிருந்தனர்.
அதுதான் அந்த இடத்தில் வேன் நின்றது என அவர் கூறியுள்ளார்.
இனிமேல் தனியாக இந்த பாதையில் பயணிக்க வேண்டாம் எனவும் சாரதியிடம் அருகிலுள்ளவர் கூறியுள்ளார்.
இந்த பாதை தொடர்பாக மேலும் சில கதைகளை நான் தொடர்ந்து தருகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)