வெள்ளி, 11 செப்டம்பர், 2009
பேய்களின் ஆட்சிகள் என்றே இந்த காலத்தை சொல்ல முடியும். காரணம் பேய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரினால் கேட்கக் கூடியதாய் உள்ளது.
பேய்களின் நடமாட்டம் அதிகமான இரவு வேளைகளில் தான் உள்ளது என பலர் கூறி கண்டுள்ளேன். ஏன் எனது அனுபவங்களும் கூடுதலாக இரவு நேரங்களில் தான்.
இன்றும் நானும் எழுதப்போவது இரவு நேரத்தில் இடம்பெற்ற உண்மை பேய் கதை தான்!
இலங்கை பிரசித்த பெற்ற ஓர் இடம். அங்கு பேய்களின் நடமாட்டம் இன்று உள்ளது என கூறுவதினால் ஊரின் பெயரை கூற விரும்பவில்லை.
அங்கு ரயிலில் இடம்பெற்ற ஓர் உண்மை சம்பவம் தான் இது.
அந்த பிரதேசத்தில் அதிகமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வார்களாம். அதனால் அந்த பிரதேசத்தில் ரயில் செல்லும் போது ஓட்டுனர் பயந்து தான் ரயிலை செலுத்துவார் என கூறுகின்றனர்.
இது இப்படி இருக்க தண்டவாளத்தை பார்த்துக் கொள்ள ஓருவரை கடமையில் அமர்த்தியிருப்பார்கள் அல்லவா. அவருக்கு தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு நாள் இரவு தனது கடமைகளுக்காக தண்டவாளத்தை பார்த்துக் கொண்டு அந்த வழியாக நடந்துச் சென்றுள்ளார்.
அவர் ரயில் செல்லும் பாலத்தை அண்மித்தார். அப்போது அந்த பாலத்தில் ஒருவர் தண்டவாளத்தை உடைத்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளார்.
யார் அது என கேள்வி எழுப்பிக் கொண்டே அருகில் சென்றுள்ளார். இவர் அருகில் செல்ல செல்ல அவர் இவரை பார்க்காது தமது வேளையை செய்துக் கொண்டுள்ளார்.
இவருக்கு கோபம் தான் சொல்வதை கேட்கவில்லை என. அருகில் சென்று தமது பலத்தை முழுமையாக உபயோகித்து அவனை தாக்கியுள்ளார்.
ஆனால் அவர் தாக்கியது திருடனை அல்ல. இரும்பு பாலத்தை தான். அவ்விடத்தி;ல் இருந்தவனை காணவில்லையாம். அவரது கை அன்றுடன் சரி!
இன்று அவர் தமது வலது கையை இழந்து தான் வாழ்ந்துக் கொண்டுள்ளார்…….
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)