இலங்கையில் மத்திய மாகாணத்தின் தலைநகர் என வர்ணிக்கப்படும் கண்டி நகருக்கு சென்றால் இயற்கையில் அழகை பார்த்து ரசிக்கக் கூடியதாய் அமைந்துள்ளது.
இங்கு இடம்பெற்ற ஒரு ஆச்சரியமான அமானுஷ்யமான கதை தான் இது..........
கண்டி நகரில் பிரசித்த பெற்ற சிங்கள பாடசாலையொன்று........ (பெயரை குறிப்பிட கூடாது என்பதற்காக பெயரை குறிப்பிடவில்லை)
இந்த பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்ற மிக அழகான ஒரு மாணவி.
பலர் இவளிடம் காதலிப்பதாக கூறியும் அதனை மறுத்து அப்பாடசாலையிலேயே கல்வி கற்று வந்தால்.
விதி யாரை விட்டது.
இப்படி 16 வருடங்கள் காதலில் விழாத இவள். தரம் 11இல் ஒரு மாணவனின் வலையில் சிக்கினாள்.
இருவரும் பல மாதங்கள் காதலித்து வந்த நிலையில், குறித்த மாணவனினால் இம்மாணவி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.
இதையடுத்து கர்ப்பமுற்ற மாணவி, தன்னை மனக்குமாறு குறித்த மாணவிடம் கோரிய போது, அதனை மறுத்துள்ளான் அந்த மாணவன்.
இவள் ஒவ்வொரு நாளும் அம்மாணவனை விடாது, தன்னை மனக்குமாறு கோரி வந்ததை அடுத்து..... அந்த மாணவன்
தனது நண்பர்களை கொண்டு அந்த மாணவியை பயமுறுத்த எண்ணி.
தனது நண்பர்களிடம் இவ்விடயத்தை கூறியுள்ளான்.
மாணவனின் நண்பர்கள் தாம் அம்மாணவியை பயமுறுத்துவதாக கூறி பொறுப்பை ஏற்றுள்ளனர்.
ஒரு நாள் மாலை வேளை.......
மாணவி தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பும் நேரம்....
மாணவியின் வீடு ஒரு தனிமை நிறைந்த வீதியிலேயே உள்ளது.
குறித்த வீதியை அடைந்த மாணவியை....... அந்த மாணவனின் நண்பர்கள் கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட குறித்த மாணவியில் அழகில் மயங்கிய நண்பர்கள்...
மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த கொலை செய்துள்ளனர் அந்த மாணவனின் நண்பர்கள்.
இந்த சம்பவம் இடம்பெற்ற சில மாதங்களின் பிறகு.........
குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலையில் வகுப்பறையில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வகுப்பறையில் குறித்த மாணவியில் கதிரைக்கு அருகில் ஒவ்வொரு நாளும் இரத்தம் வடிந்துக் கொண்டே இருக்குமாம்.....
இந்த இரத்தம் சிறிது காலம் தொடர்ந்து வடிந்துள்ளதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மாணவியின் இரத்த கண்ணீர் என்பதே பாடசாலை ஆசிரியர்கள் கருத்தாக அமைந்தது.
திங்கள், 26 ஜூலை, 2010
இரத்தக் கண்ணீர்!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:44 PM லேபிள்கள்: arun, ghost, kandy, ranjan arunprasadh, tamilghostஞாயிறு, 27 ஜூன், 2010
லொறியில் மோதிய பெண்!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:21 AM லேபிள்கள்: arun, ghost, ranjan arunprasadh, tamilghostபேய்களின் நடமாட்டத்தை அதிகளவில் வாகன சாரதிகளுக்கே காண்கின்றனர். காரணம் அவர்கள் தான் ஒவ்வொரு நாளும் வேறுப்பட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு செல்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு சாரதிக்கும் பல்வேறு அனுபவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!
இப்படி எனது நண்பரொருவர் வாகன சாரதியாக கடமையாற்றி வருகின்றனர்.
இவர் அதிகளவில் வெளி மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.
அநுராதபுரத்தில் தனது வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்த எனது நண்பன், இரவு நேரத்தில் மற்றுமொருவருடன் லொறியில் வந்து கொண்டிருந்துள்ளார்.
ஒரு இடத்தில் வைத்து எனது நண்பனுக்கு அருகிலுள்ள நபர் தீடிரென கத்தியுள்ளார்.
வாகனத்திற்கு முன்னால் பெண்ணொருவர் நிற்பதாகவும், வாகனத்தை நிறுத்துமாறும் கூறி சத்தமிட்டுள்ளார்.
ஆனால் சாரதிக்கு ஒன்றும் தெரியவில்லை. வாகனத்திற்கு முன்னால் யாரும் நிற்பதுவும் தெரியவில்லை.
இவர் வாகனத்தையும் நிறுத்தாது வேகமாக வந்து விட்டார்.
அப்போது அருகிலிருந்த நபர் எனது நண்பனை பார்த்து.
நான் சொன்ன நேரமே லொறியை நிறுத்தியிருந்திருக்கலாம் தானே. இப்போ பெண்ணை மோதிவிட்ட தானே. அவள் இறந்திருப்பா என கூறியுள்ளார்.
இதை கேட்ட எனது நண்பனுக்கு ஒரே ஆச்சரியம். யாரும் இருக்கவில்லையே. இவன் ஏன் இப்படி சொல்லனும். என பல கேள்விகள் மனதில்.
அப்போது ஒன்றுமே புரியவில்லை எனது நண்பனுக்கு.
லொறியை வேகமாக செலுத்திய எனது நண்பனுக்கு மற்றுமொரு ஆச்சியமான செயல் அப்போதே நிகழ்ந்துள்ளது.
என்ன தெரியுமா. வாகனம் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கு வந்துக் கொண்டே உள்ளதாம். ஆனால் அந்த பாதை எனது நண்பனுக்கு நன்றாக பரீட்சீயமான பாதை.
அப்படி இருந்தும் மீண்டும் மீண்டும் அந்த பெண் மோதுண்டதாக கூறப்பட்ட இடத்திற்கே வாகனம் எப்படியோ வருதாம். புரியவில்லை எனது நண்பனுக்கு.
ஏதோ நடக்கின்றது என மனதில் எண்ணம். வாகனத்தை அப்படியே ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு தூங்கி விட்டார்களாம்.
மீண்டும் காலையில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் எனது நண்பனும் அவனுடைய நண்பனும்!
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
நான் இருந்த முன்னைய வீட்டிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேறு வீட்டிற்கு சென்று விட்டோன்.
அந்த வீட்டில் எனக்கு நடந்த ஒரு சம்பவம் தான் இது.
நான் அன்று வீட்டிற்குச் செல்லும் போது இரவு 10 மணி. இரவு உணவை சாப்பிட்டு விட்டு வீட்டிலுள்ள அனைவருடனும் கதைத்துக் கொண்டிருந்தேன்.
அன்று எனது நண்பனொருவனும் வீட்டிற்கு வந்திருந்தான்.
மறுநாள் எனக்கு அதிகாலை 2 மணிக்கு எழும்ப வேண்டும். காரணம் வேலைக்கு போக.
எனினும், சுமார் 12 மணி இருக்கும் எனக்கு தூக்கம். நான் அப்போது தான் நித்திரைக்குச் சென்றேன்.
எமது கையடக்கத் தொலைபேசி பாட்டை பாட தொடங்கியது. எழுந்து பார்த்தால் 2 மணி. சரி எழுந்து விடுவோம் என நினைத்து எழுந்தேன்.
எனது நண்பன் என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தான். சில விநாடிகளில் எழுந்தான்.
அப்போது நான். இன்னும் நேரம் இருக்கு தூங்குடா? என கூறி வேளையிலேயே, எமது மற்றைய தொலைபேசியிலிருந்தும் சத்தம் வர தொடங்கியது.
தொலைபேசியை எடுக்க மறுப்பக்கம் திரும்பி, மீண்டும் எனது நண்பனை பார்த்தேன்.
அங்கு என் நண்பனை காணவில்லை. எனக்கு ஒரே அதிர்ச்சி. என்ன நடந்திருக்கும். எங்கே போயிருப்பான். என பல கேள்விகள் மனதில்.
ஒரு பக்கம் மனதில் சிறிய பயம் கூட.
பின்னர் மற்றைய அறையில் சென்று பார்த்தேன். என் நண்பன் அங்கு நல்ல நித்திரை.
அப்போது தான் ஏதோ நடக்கிறது என புரிந்துக் கொண்டேன். அந்த வீட்டில் இதுபோன்ற பல சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளன.
அவற்றை எதிர்வரும் பதிவுகளில் தர எண்ணியுள்ளேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)