ஞாயிறு, 27 ஜூன், 2010
லொறியில் மோதிய பெண்!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:21 AM லேபிள்கள்: arun, ghost, ranjan arunprasadh, tamilghostபேய்களின் நடமாட்டத்தை அதிகளவில் வாகன சாரதிகளுக்கே காண்கின்றனர். காரணம் அவர்கள் தான் ஒவ்வொரு நாளும் வேறுப்பட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு செல்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு சாரதிக்கும் பல்வேறு அனுபவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!
இப்படி எனது நண்பரொருவர் வாகன சாரதியாக கடமையாற்றி வருகின்றனர்.
இவர் அதிகளவில் வெளி மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.
அநுராதபுரத்தில் தனது வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்த எனது நண்பன், இரவு நேரத்தில் மற்றுமொருவருடன் லொறியில் வந்து கொண்டிருந்துள்ளார்.
ஒரு இடத்தில் வைத்து எனது நண்பனுக்கு அருகிலுள்ள நபர் தீடிரென கத்தியுள்ளார்.
வாகனத்திற்கு முன்னால் பெண்ணொருவர் நிற்பதாகவும், வாகனத்தை நிறுத்துமாறும் கூறி சத்தமிட்டுள்ளார்.
ஆனால் சாரதிக்கு ஒன்றும் தெரியவில்லை. வாகனத்திற்கு முன்னால் யாரும் நிற்பதுவும் தெரியவில்லை.
இவர் வாகனத்தையும் நிறுத்தாது வேகமாக வந்து விட்டார்.
அப்போது அருகிலிருந்த நபர் எனது நண்பனை பார்த்து.
நான் சொன்ன நேரமே லொறியை நிறுத்தியிருந்திருக்கலாம் தானே. இப்போ பெண்ணை மோதிவிட்ட தானே. அவள் இறந்திருப்பா என கூறியுள்ளார்.
இதை கேட்ட எனது நண்பனுக்கு ஒரே ஆச்சரியம். யாரும் இருக்கவில்லையே. இவன் ஏன் இப்படி சொல்லனும். என பல கேள்விகள் மனதில்.
அப்போது ஒன்றுமே புரியவில்லை எனது நண்பனுக்கு.
லொறியை வேகமாக செலுத்திய எனது நண்பனுக்கு மற்றுமொரு ஆச்சியமான செயல் அப்போதே நிகழ்ந்துள்ளது.
என்ன தெரியுமா. வாகனம் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கு வந்துக் கொண்டே உள்ளதாம். ஆனால் அந்த பாதை எனது நண்பனுக்கு நன்றாக பரீட்சீயமான பாதை.
அப்படி இருந்தும் மீண்டும் மீண்டும் அந்த பெண் மோதுண்டதாக கூறப்பட்ட இடத்திற்கே வாகனம் எப்படியோ வருதாம். புரியவில்லை எனது நண்பனுக்கு.
ஏதோ நடக்கின்றது என மனதில் எண்ணம். வாகனத்தை அப்படியே ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு தூங்கி விட்டார்களாம்.
மீண்டும் காலையில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் எனது நண்பனும் அவனுடைய நண்பனும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக