ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
நான் இருந்த முன்னைய வீட்டிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேறு வீட்டிற்கு சென்று விட்டோன்.
அந்த வீட்டில் எனக்கு நடந்த ஒரு சம்பவம் தான் இது.
நான் அன்று வீட்டிற்குச் செல்லும் போது இரவு 10 மணி. இரவு உணவை சாப்பிட்டு விட்டு வீட்டிலுள்ள அனைவருடனும் கதைத்துக் கொண்டிருந்தேன்.
அன்று எனது நண்பனொருவனும் வீட்டிற்கு வந்திருந்தான்.
மறுநாள் எனக்கு அதிகாலை 2 மணிக்கு எழும்ப வேண்டும். காரணம் வேலைக்கு போக.
எனினும், சுமார் 12 மணி இருக்கும் எனக்கு தூக்கம். நான் அப்போது தான் நித்திரைக்குச் சென்றேன்.
எமது கையடக்கத் தொலைபேசி பாட்டை பாட தொடங்கியது. எழுந்து பார்த்தால் 2 மணி. சரி எழுந்து விடுவோம் என நினைத்து எழுந்தேன்.
எனது நண்பன் என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தான். சில விநாடிகளில் எழுந்தான்.
அப்போது நான். இன்னும் நேரம் இருக்கு தூங்குடா? என கூறி வேளையிலேயே, எமது மற்றைய தொலைபேசியிலிருந்தும் சத்தம் வர தொடங்கியது.
தொலைபேசியை எடுக்க மறுப்பக்கம் திரும்பி, மீண்டும் எனது நண்பனை பார்த்தேன்.
அங்கு என் நண்பனை காணவில்லை. எனக்கு ஒரே அதிர்ச்சி. என்ன நடந்திருக்கும். எங்கே போயிருப்பான். என பல கேள்விகள் மனதில்.
ஒரு பக்கம் மனதில் சிறிய பயம் கூட.
பின்னர் மற்றைய அறையில் சென்று பார்த்தேன். என் நண்பன் அங்கு நல்ல நித்திரை.
அப்போது தான் ஏதோ நடக்கிறது என புரிந்துக் கொண்டேன். அந்த வீட்டில் இதுபோன்ற பல சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளன.
அவற்றை எதிர்வரும் பதிவுகளில் தர எண்ணியுள்ளேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக