skip to main | skip to sidebar

WWW.TAMILGHOST.TK

உலகிலுள்ள இன்னுமொரு சக்தி!

  • Entries (RSS)
  • Comments (RSS)
  • Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

இப்படியும் ஆவி உண்டு!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 11:01 PM

பேய்களின் ஆட்சிகள் என்றே இந்த காலத்தை சொல்ல முடியும். காரணம் பேய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரினால் கேட்கக் கூடியதாய் உள்ளது.

பேய்களின் நடமாட்டம் அதிகமான இரவு வேளைகளில் தான் உள்ளது என பலர் கூறி கண்டுள்ளேன். ஏன் எனது அனுபவங்களும் கூடுதலாக இரவு நேரங்களில் தான்.

இன்றும் நானும் எழுதப்போவது இரவு நேரத்தில் இடம்பெற்ற உண்மை பேய் கதை தான்!

இலங்கை பிரசித்த பெற்ற ஓர் இடம். அங்கு பேய்களின் நடமாட்டம் இன்று உள்ளது என கூறுவதினால் ஊரின் பெயரை கூற விரும்பவில்லை.

அங்கு ரயிலில் இடம்பெற்ற ஓர் உண்மை சம்பவம் தான் இது.

அந்த பிரதேசத்தில் அதிகமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வார்களாம். அதனால் அந்த பிரதேசத்தில் ரயில் செல்லும் போது ஓட்டுனர் பயந்து தான் ரயிலை செலுத்துவார் என கூறுகின்றனர்.

இது இப்படி இருக்க தண்டவாளத்தை பார்த்துக் கொள்ள ஓருவரை கடமையில் அமர்த்தியிருப்பார்கள் அல்லவா. அவருக்கு தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு நாள் இரவு தனது கடமைகளுக்காக தண்டவாளத்தை பார்த்துக் கொண்டு அந்த வழியாக நடந்துச் சென்றுள்ளார்.

அவர் ரயில் செல்லும் பாலத்தை அண்மித்தார். அப்போது அந்த பாலத்தில் ஒருவர் தண்டவாளத்தை உடைத்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளார்.

யார் அது என கேள்வி எழுப்பிக் கொண்டே அருகில் சென்றுள்ளார். இவர் அருகில் செல்ல செல்ல அவர் இவரை பார்க்காது தமது வேளையை செய்துக் கொண்டுள்ளார்.

இவருக்கு கோபம் தான் சொல்வதை கேட்கவில்லை என. அருகில் சென்று தமது பலத்தை முழுமையாக உபயோகித்து அவனை தாக்கியுள்ளார்.

ஆனால் அவர் தாக்கியது திருடனை அல்ல. இரும்பு பாலத்தை தான். அவ்விடத்தி;ல் இருந்தவனை காணவில்லையாம். அவரது கை அன்றுடன் சரி!

இன்று அவர் தமது வலது கையை இழந்து தான் வாழ்ந்துக் கொண்டுள்ளார்…….
3 கருத்துகள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

பெண்ணின் நடமாட்டம்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:03 PM

பேய்கள் என்றாலே கூடுதலாக தனிமையான, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலேயே இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர்.

அப்படி தனிமையான இடங்களில் பேய்களை கண்டவர்கள் அதிகம் இருக்கின்றனர். அப்படி தான் எனக்கு தெரிந்த, இலங்கையில் மிக பிரசித்தி பெற்ற ஓர் இடம்! அந்த ஊரில் பேய்களின் நடமாட்டம் சற்று அதிகமாக தான் இருக்கும்.

அந்த ஊரில் இடம்பெற்ற ஓர் சம்பவத்தை தான் இந்த பதிவில் எழுதுகிறேன்.
குறித்த ஊரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் ஒரு சிறிய கிராமம்.

அந்த கிராமத்தில் தேயிலை செறிந்த காணப்படுவதுடன், வாழைத் தோப்புக்களும் காணப்படுகின்றன.

அத்துடன், அந்த ஊரில் சிறிய நீர் வீழ்ச்சியொன்றும் உள்ளதுடன், அதனை சூழ மூங்கில்கள் கூட்ட கூட்டமாக காணப்படுகின்றமை அனைவரது உள்ளங்களையும் கவரும் ஒரு இயற்கை காட்சி.

ஆனால், அந்த இயற்கையில் தான் மறைந்திருக்கும் ஓர் உண்மை சம்பவம்.
அந்த மூங்கில்கள் காணப்படும் இடத்தில் ஒரு தனி வீடு! அந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை.

மனிதர்கள் வாழ வேண்டிய வீட்டில் பிராணிகள் தான் வாழ்ந்து வருகின்றன.
இதற்கான காரணம் தான் அந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், அந்த வீட்டில் ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அழகான அம்சமான குடும்பம்.

இவர்களில் அந்த வீட்டில் சிறிது காலமே வாழ்ந்தனர். அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இப்படி பல பிரச்சினைகள் ஏற்பட்டதை அடுத்து அந்த குடும்பத்தில் தலைவியை தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அந்த வீட்டில் இன்றும் அந்த பெண்ணின் நடமாட்டம் இருக்கின்றதாக தெரிவிக்கின்றனர் அப்பிரதேச மக்கள்.

இந்த பெண்ணின் கொலையை அடுத்து வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளனர் அந்த வீட்டின் உரிமையாளர்கள்.

இந்த நிலையில் குறித்த வீட்டில் வாடகைக்காக ஒருவர் மாத்திரமே வந்து தங்கியுள்ளார். முதலாம் நாள் இரவு. இந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறமை அவருக்கு தெரியாது. (யாருக்கும் தெரியாது)

நேரம் சுமார் 10 மணி இருக்கும். கடையில் வாங்கி வந்த இறைச்சியுடன் கூடிய உணவை உண்டு விட்டு நித்திரைக்கு சென்றுள்ளார் குறித்த நபர்.

11 மணியளவில் ஒரு சிறிய சத்தம் கேட்டுள்ளது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. மீண்டும் பெண்ணொருவர் அழுவது போல சத்தம் கேட்டுள்ளது. யார் இந்த இடத்தில் இந்த நேரத்தில் அழுவது என மனதில் நினைத்து படுக்கையிலிருந்து எழுந்து சென்றுள்ளார்.

பார்த்தால் யார் இல்லை. பின்னர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார்.

சரியாக நள்ளிரவு 12 மணி.

அய்யோ என்னை காப்பாற்றுங்கள் என ஒரு பெண்ணின் குரல். இவர் எழுந்து கையில் கிடைத்த இரும்பொன்றை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

மீண்டும் அதே குரல் வீட்டிற்குள் கேட்டுள்ளது. வீட்டிற்குள் வந்து பார்த்தால், வெளியில் அந்த பெண்ணின் சத்தம். இப்படி மாற்றி மாற்றி சத்தம் கேட்டுள்ளது.

அப்போது தான் இவருக்கு ஓர் சந்தேகம்! இது நிச்சயம் பெண்ணின் குரல் இல்லை. இது ஆவிகளின் நடமாட்டமாக தான் இருக்கும் என மனதில் நினைவு.

அப்படியே வீட்டிற்குள் சென்று விட்டார். பின்னர் அன்று முழுநாளும் அவர் தூங்கவில்லையாம். அன்றிரவே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த நாள் வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவர் சென்று விட்டாராம்.
அன்றிலிருந்து இன்று வரை அந்த வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை.

இன்றும் அந்த வீட்டில் சத்தங்கள் கேட்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்

சனி, 15 ஆகஸ்ட், 2009

ஆவி தள்ளிய வேன்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 12:44 PM

நமது வெற்றியின் செய்தி பிரிவில் கடமையாற்றும் லெனினின் உண்மை கதை!

இவரும் இவருடைய நண்பர்களும் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் புஸ்ஸல்லா பகுதியிலுள்ள போபிட்டிய பிரதேசத்தில் மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்கள் அந்த மரண சடங்கு வீட்டிற்கு வேன் ஒன்றிலேயே சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் வேனில் ஹட்டனை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் போது, வேனில் ஒரே பேய் கதைகளை கதைக் கொண்டே சென்றுள்ளனர்.

அப்போது அவருடைய நண்பனொருவன் ஒரு பகுதியை குறிப்பிட்டு அந்த இடத்தில் இரவு வேளையில் செல்லும் வாகனங்கள் தீடீரென நின்று விடுவதாக கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டு, பார்ப்போம் இன்று நாங்கள் அதே பாதையின் ஊடாக தானே செல்ல போறோம். என்ன நடக்குதுனு பார்ப்போம் என தெரிவித்துள்ளனர்.

சரியான அதிகாலை 2 மணி, குறித்த இடத்தை வேன் நெருங்கியுள்ளது.

யாரும் பாதையில் இல்லை. இருள் சூழ்ந்த நிலையில். பாதை அமைதியாக பேய்களை வரவேற்பது போல் காட்சியளித்தது.

குறித்த இடம். அவன் கூறியது போலவே எஞ்சின் தீடீரென செயலிழந்து வேன் வீசுப்பட்டு, உரு சுவரில் மோதி நின்றதாம்!

வேனில் எரிந்து கொண்டிருந்த அனைத்து மின்விளக்குகளும் அனைந்து, குறித்த இடமே இருளாயிற்றாம்.

சாரதி வேனை மீண்டும் ஸ்டாட் செய்ய முயற்சித்தும், வேன் ஸ்டாட் ஆகவில்லையாம்.

சுமார் அதே இடத்தில் சூரியன் உதிக்கும் வரை அவர்கள் அங்கேயே இருந்;துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த வேனில் இருந்த வேளையில் யாரோ வேனை தட்டுவது போலவும், வேனை தள்ளுவது போலவும் உணர்வுகள் தென்பட்டதாம்!

அன்று விடிந்தது. ஆள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. அப்போது அந்த பிரதேசத்தில் சென்றவர்களிடம் இவர்கள் விசாரித்துள்ளனர்.

அப்போது பிரதேச மக்கள் தெரிவித்ததாகவது:- இது அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற 5ஆவது சம்பவம் எனவும், இந்த பிரதேசத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர் காலை வேளையில் வேன் ஸ்டாட் செய்தவுடன் ஸ்டாட் ஆகிவிட்டதாம்!
3 கருத்துகள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பாதையின் முடிவில் புதைக்குழி!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:18 PM

ஒரு தனியான பாதை, யாரும் அந்த பாதையில் மாலை 6 மணிக்கு பின்னர் செல்ல மாட்டார்கள். (இன்றும்)

மின்விளக்குகள் கூட அந்த பாதையில் இல்லை. மாலை 6 மணிக்கு பின்னர் இருள் சூழ்ந்த நிலையிலேயே காணப்படும் அந்த பாதை, பார்க்கவே பயமாக தான் இருக்கும். அப்போ எப்படி செல்வது.

இந்த பாதையில் சில வீடுகள் உள்ளன. அவர்கள் கூட அந்த பாதiயில் இரவு வேளையில் அதிகளவில் நடமாடமாட்டார்கள்.

இந்த பாதை முடிவடையும் இடம் தான் யாரும் இரவில் செல்லாததற்கான காரணம். பாதை முடியும் இடத்தில் அப்படி என்ன?

புதைக்குழி.

இரவு வேளைகளில் இந்த பகுதியிலிருந்த சத்தங்கள் கேட்பதாக அந்த பகுதியிலுள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி ஒரு நாள் அங்குள்ள ஒரு வீட்டில் திருமணம். இதற்காக முதல் நாள் இரவு வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அந்த வீட்டில் பலர் இரவு நேர வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களில் சிலர் அந்த பகுதிக்கு புதிது. அவர்களுக்கு தெரியாது அங்கு நடக்கும் செயற்பாடுகள். இவர்களில் சிலர் இரவு 9 மணியளவில் அந்த பாதையினூடாக சென்று மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிறிய சத்தம். யாரோ இருவர் கதைத்துக் கொண்டிருப்பது போல. ஆனால் அவர்கள் அதை கணக்கெடுக்கவில்லை.

தொடர்ந்தும் நண்பர்கள் அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

தீடீரென ஒரு உருவம். அவர்களை நோக்கி வருவது போல. ஆனால் அதையும் அவர்களை யாரும் கணக்கெடுக்கவில்லை. யாரோ திருமண வீட்டிற்கு வருகின்றார்கள் என நினைத்து தொடர்ந்தும் அவர்களுடைய வேலைகளை ஆரம்பித்தனர்.

அவ்வாறு அவர்களை நோக்கி வந்த உருவம். சிறிது நேரத்தின் பின்னர் சற்று பெரியதாகி வந்தது. அதை கண்ட அவர்களுக்கு சிறிய சந்தேகம் தோன்றியப்போதிலும், அதையும் கணக்கெடுக்கவில்லை.

மீண்டும் அந்த உருவம் பாரியளவில் பெரிதாகி அவர்களை நோக்கி வந்ததை கண்ட அந்த குழுவினர் அங்கிருந்து எழுந்தனர்.

எழுந்த நிலையில் அந்த உருவத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, உருவம் அவர்களை நெருங்கியது. அப்போது தான் அவர்கள் அந்த உருவத்தின் முகத்தை பார்த்தனர்.

அந்த உருவத்தின் முகம் பார்க்கவே பயங்கரமாக இருந்ததுடன், எரிந்த நிலையில் காணப்பட்டது.

இதைகண்ட அவர்கள் அந்த பகுதியை விட்டு ஓட ஆரம்பித்தனர்.

அடுத்த நாள் திருமணம்.

முன்தினம் இரவு மது அருந்த சென்ற அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம் அனைவருக்கும் காய்ச்சல்.

இவர்களுக்கு ஏற்பட்ட இந்த காய்ச்சல் சுமார் 2 கிழமைகளுக்கு மேல் நீடித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றும் அந்த பாதை அப்படியே தான் இருக்கிறது. தயவு செய்து அப்படியான பாதைகளில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
1 கருத்துகள்

வியாழன், 9 ஜூலை, 2009

மைக்கல் ஜெக்சனின் ஆவி!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:54 AM
0 கருத்துகள்

வியாழன், 9 ஏப்ரல், 2009

தனியே யாரும் செல்லாத பாதை!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:27 AM

வித்தியாசமான பாதைகள் பலவற்றை நாம் கண்டுள்ளோம், ஆனால் இலங்கையிலுள்ள மிக பிரசித்தி பெற்ற பாதையொன்று உள்ளது.

அந்த பாதையானது ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ஒவ்வொரு பெரிய வளைவுகளுடன் அமைந்துள்ளது. சுமார் 10 கிலோமீற்றர்களை கொண்ட இந்த பாதையில் பைனஸ் மரங்கள் சூழவுள்ளன. இந்த பாதையில் சிறிய நீர்வீழ்ச்சிகளும் எமக்கு பார்க்க கூடியதாய் இருக்கும். இருப்பினும் இந்த பாதை ஆள்நடமாட்டமில்லாமலேயே இருக்கும்.

எனினும், இந்த பாதையில் காலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை மட்டுமே பயணிக்க முடியும். அதன் பிறகு பயணிப்பவர்களின் உயிரிற்கு உத்தரவாதமில்லை என தான் கூறவேண்டும்.

எனெனில், குறித்த பாதையில் கொலை மற்றும் கொள்ளை ஆகியன இடம்பெறும் ஒரு பகுதி! அதை தவிர மிருகங்களில் இராஜ்ஜியம் அந்த பாதை.

இந்த பாதையை கடந்த சென்றால் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரக்கறி தோட்டங்கள் அமைந்துள்ளன.

இவ்வாறு குறித்த பிரதேசத்தில் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் யாரும் அந்த பாதையில் இரவு வேளையில் செல்ல சற்று தயங்குவார்கள். ஏன் பகலிலும் கூட.

இப்படி, இருக்கும் போது ஒரு நாள் இரவு 10 மணி. ஒருவர் அந்த பாதையில் வேன்னொன்றில் இருவர் மாத்திரம் வந்துள்ளனர்.

எனினும், வாகன சாரதிக்கு இந்த பாதையில் நடக்கும் சம்பவங்கள் பற்றி ஒன்றும் தெரியாது, இருப்பினும், மற்றையவர் அதைபற்றி அறிந்திருந்தார்.

சரியாக 7 கிலோமீற்றர் கடந்த வந்துவிட்டனர். தீடீரென அவர்கள் பயணித்த வேன் யாராவது தள்ளுவது போல் தள்ளுப்பட்டு இயந்திரம் நின்றுவிட்டது.

சாரதிக்கு ஒரே தடுமாற்றம். என்ன இப்படி என. மீண்டும் வாகனத்தை ஸ்டாட் செய்ய வாகனம் ஸ்டாட் ஆகவில்லை.

சரி இறங்கி பார்ப்போம் என அந்த சாரதி கூற, பக்கத்தில் இருந்தவருக்கு இந்த பாதையை பற்றிய அனுபவமுண்டு அல்லவா. வேண்டாம் சற்று இருப்போம் என கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து இருவரும் அந்த வேனிலேயே சுமார் 10 நிமிடங்கள் இருந்து பின்னர் வேனை ஸ்டாட் செய்துள்ளனர்.

அப்போது உடனடியாக ஸ்டாட் ஆகியுள்ளதாம். இவர்கள் வந்து விட்டார்கள்.

சற்று தொலைவில் வந்த சாரதி அருகில் அமர்ந்திருந்தவரிடம் ஏன் அந்த இடத்தில் வேன் நின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர், நேற்றைய தினம் அந்த இடத்தில் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு அந்த இடத்தில் தான் போட்டு விட்டுச் சென்றிருந்தனர்.
அதுதான் அந்த இடத்தில் வேன் நின்றது என அவர் கூறியுள்ளார்.

இனிமேல் தனியாக இந்த பாதையில் பயணிக்க வேண்டாம் எனவும் சாரதியிடம் அருகிலுள்ளவர் கூறியுள்ளார்.

இந்த பாதை தொடர்பாக மேலும் சில கதைகளை நான் தொடர்ந்து தருகிறேன்.
0 கருத்துகள்

திங்கள், 16 மார்ச், 2009

பெண் அல்ல அது!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:20 PM

பாடசாலையின் காவலாளி தினமும், 8 மணிக்கு தனது கடமையை பொறுப்பெடுத்து, காலை 6 மணிக்கு தமது கடமையிலிருந்து சென்று விடுவார்.

காவலுக்குவரும் அவர் பாடசாலையை சுற்றி வந்துக் கொண்டே இருப்பது அவர் செய்யும் வேளை.

வழமைப்போல ஒரு நாள் இரவு. கடமைக்கு வந்த காவலாளி தனது இரவு உணவை சாப்பிட்டு விட்டு, தனது வேலையை ஆரம்பித்தார்.

சரியாக நேரம் 12 மணி பாடசாலையிலுள்ள படிகளுக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருப்பதை கண்ட காவலாளி. மனதில் யார் அந்த பெண் என்ற யோசனை.

சரி அருகில் சென்று பார்ப்போம் என நினைத்து சற்று அருகே சென்று பார்க்கும் போது. பாடசாலை ஆசிரியர்களுக்கான விடுதியிலுள்ள ஆசிரியரின் மனைவி தான் அது.

கண்டதும் காவலாளிக்கு சற்று கோபம் வந்தது. காரணம் இந்த 12 மணிக்கு தனியாக ஒரு பெண்ணை வெளியில் அனுப்பியுள்ளார் ஆசிரியர் என தான்.

ஏதாவது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என நினைத்து அந்த பெண்ணிடம் எதையும் கேட்கவில்லை காவலாளி.

உடனடியாக காவலாளி சென்றார் ஆசிரியரின் விடுதிக்கு,
விடுதியிலுள்ள ஆசிரியரை எழுப்பிய காவலாளி, சற்று கோபத்துடன்,

உங்களுக்குள் என்ன பிரச்சினை வந்தாலும், தனியாக மனைவியை இந்த 12 மணிக்கு வெளியில் அனுப்புவதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஆசிரியர், உனக்கென பைத்தியமா? உள்ளே வந்து பார் அவள் தூங்குகிறாள் என கூற.

காவலாளிக்கு சந்தேகம் இப்போது தானே பார்த்தது விட்டு வந்தேன் என நினைத்து,

அங்கிருந்தே படியை பாரத்த காவலாளி படியில் யாரும் இல்லை. அப்போது தான் தெரியும். கண்டது பெண் அல்ல அது! பேய்

அன்று முழு நாளும் ஆசிரியரின் விடுதியிலுள்ள அறையொன்றில் தங்கிக் கொண்டுள்ளார் குறித்த காவலாளி.
1 கருத்துகள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

Sponsored

  • banners
  • banners
  • banners
  • banners

Blog Archive

  • ▼  2010 (3)
    • ▼  ஜூலை (1)
      • இரத்தக் கண்ணீர்!
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (1)

Followers

Blogger இயக்குவது.

About Me

எனது படம்
R.ARUN PRASADH
SRI LANKA,
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
free counters

Blog Archive

  • ▼  2010 (3)
    • ▼  ஜூலை (1)
      • இரத்தக் கண்ணீர்!
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (1)
 

© 2010 My Web Blog
designed by DT Website Templates | Bloggerized by Agus Ramadhani | Zoomtemplate.com