புதன், 11 மார்ச், 2009
தாயும் மகளும் மாத்திரமே அந்த குடும்பத்தில் உள்ளனர். மகளுடைய வயது 10! இவர்களுக்கு சொந்த வீடொன்று இருக்கவில்லை.
அதனால் அவர்கள் வாடகைக்கு அமர்த்தப்படும் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
இப்படி ஒரு சந்திர்ப்பத்தில் ஒரு சிறிய வீடொன்றிற்கு வாடகைக்கு சென்றனர்.
வீட்டை கண்ட மகளுக்கு மிகுந்த சந்தோஷம், காரணம் அவளுடைய அறை மாத்திரம் வீட்டிலேயே மிக பெரிய அறை என்பதினால்!
இப்படி காலங்கள் சென்று வருடங்களும் சென்றது.
இந்த வீட்டில் ஒருவர் இறந்துள்ளதாகவும், அவரின் ஆவி இன்னமும் இந்த வீட்டில் உள்ளதாகவும் வீட்டிற்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ள குறித்த சிறுமியின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
எனினும், இந்த சிறுமி கூறியதாவது, நாங்கள் இத்தனை வருடங்களாக இருக்கின்றோம், எனினும் இதுவரை யாரும் அப்படி வீட்டிற்குள் வரவில்லை என.
தற்போது, இந்த சிறுமியின் வயது 14 ஆகும். இதுவரை வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.
குறித்த சிறுமியின் தாய், நித்திரைக்கு செல்லும் முன்னர் வீட்டிலுள்ள அனைத்து மின்குழிழிகளை அனைப்பது வழக்கம்!
இப்படி ஒரு நாள்! சிறுமி நித்திரைக்கு சென்று நித்திரை கொண்டுள்ளாள்.
காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டிலுள்ள தாயின் அறையில் மின்குழிழ் எரிகின்றமையை கண்டதும் சிறுமிக்கு ஆச்சரியம்!
ஒருபோதும் இவ்வாறு அம்மா மின்குழிழை எரியவிடமாட்டரே! அனைத்து விடுவாரே! என நினைத்து கொண்டு தாயிடம் கேட்டபோது!
தான் நித்திரைக்கு சென்று, மின்குழிழை அனைத்து விட்டு கட்டலில் படுத்து, சிறிது நேரத்தின் பின்னர், எழுந்து பார்க்கும் போது யாரோ ஒருவர் தன்னை நோக்கி பார்ப்பதை போலவும், அவர் மீசை வைத்த உயர்ந்த மனிதன் எனவும் கூறியுள்ளார்.
அதனாலேயே தான் மின்குழிழை அனைக்காது இருந்ததாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
இதைகேட்ட சிறுமிக்கு எவ்வித பயமும் இருக்கவில்லை, காரணம் 14 வயது சிறுமி தானே!
இப்படி நாட்கள் சென்றன. ஒரு நாள் சிறுமி நித்திரைக்குச் செல்லும் போது, கண்ணாடியை பார்ப்பது வழக்கம்! அன்றும் தன்னிடமுள்ள கண்ணாடியில் முகத்தை பார்த்து விட்டு, அந்த கண்ணாடியை தமது மேசை லாச்சியினுள் வைத்து விட்டு, நித்திரை கொண்டுள்ளாள், காலையில் எழுந்து பார்த்ததும் அந்த கண்ணாடி கீழே வீழ்ந்துள்ளது.
அதனை அந்த சிறுமி பெரிதாக நினைக்கவில்லை. தான் தான் கண்ணாடியை மறந்து விட்டு கீழே வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளாள் அந்த சிறுமி.
இன்னுமொரு நாள்! நித்திரையை விட்டு காலையில் எழுந்து பார்க்கும் போது, சிறுமியின் நகை பெட்டியை யாரோ எடுத்து பார்த்துள்ளது போல் இருந்துள்ளது.
இப்படி சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதனை இந்த சிறுமி தனது நண்பர்களிடமும் தாயிடமும் கூறியுள்ளார்
எனினும், நண்பர்கள் இதனை நம்பவில்லை. இவள் இரவில் தனியாக நடக்கின்றாள் போல என கூறி கேலி செய்துள்ளனர்..
ஆனால் இதனை அந்த சிறுமியின் தாய் நம்பியுள்ளார். காரணம் கண்ட அனுபவம் உண்டல்லவா!
இப்படி சில நாட்களாக நடந்த சம்பவங்களை கண்ட அந்த சிறுமியின் தாய், வீட்டை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளார்.
வேறு வீடொன்றை பார்த்து விட்டு, அடுத்த நாள் புதிய வீட்டிற்கு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் தயாராக்கப்பட்டது. ஆகவே இன்று கடைசி இரவு!
ஆபத்தான இரவு! காரணம் கடைசி இரவல்லா! எது வேண்டுமானாலும் நடக்கலாம்!
சிறுமி நித்திரைக்குச் சென்று விட்டாள், தாயும் சென்று விட்டாள் நித்திரைக்கு!
நேரம் சென்று விட்டது, சிறுமிக்கு நித்திரை சென்று நீண்ட நேரம்!
தீடீரென சிறுமியின் கண்கள் திறந்தன. திறந்து பார்க்கும் போது வீடு முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது.
தமது கட்டிலுக்கு அருகில் ஒருவர் நின்று கொண்டிருக்கின்றது போல் அந்த சிறுமிக்கு உணர்வு. பார்த்தாள், ஒருவர் தன் எதிரில் நின்று கொண்டு, தன்னை பார்ப்பது போல. தீடீரென கதவுகள் திறப்பது போல் சத்தம்!
நிலத்துடன் கதவு உராய்வது போல!
சிறுமி தனது கண்களை நன்றாக திறந்து பார்த்த போது, யாரோ ஒருவர் தனது அறை கதவை இழுத்து பிடித்திருப்பது போல்.
அவ்வாறு பிடித்திருப்பவரின் கை மாத்திரமே சிறுமிக்கு தெரிகின்றது.
அந்த கை, புகை படர்ந்திருப்பது போல், முழுமையான கை இருக்கவில்லை. எப்படி இருக்கும் அந்த சிறுமிக்கு. எவ்வித அசைவும் இன்றி அப்படியே கட்டிலில் இருந்திருக்கிறாள் அந்த சிறுமி!
சிறித நேரத்தில் தன்னை அறியாமலே நித்திரை சென்று விட்டது. அதிகாலை வேளையில் மீண்டும் சிறுமி எழுந்துள்ளார், அப்போது வீட்டின் மின்குமிழ்கள் எரிக்கின்றதாம்.
மீண்டும் நித்திரைக்கு சென்றுவிட்டாள் அந்த சிறுமி!
காலையில் எழுந்து தனது தாயிடம் இந்த சம்பவம் தொடர்பான கலந்துரையாடிய குறித்த சிறுமி! அனைத்தையும் கூறியுள்ளார். அப்போதே தனக்கும் அவ்வாறான சத்தங்கள் கேட்டதாகவும், அதனாலேயே தான் மின்குமிழ்களை எரிய செய்ததாகவும் தெரிவித்துள்ளார் தாய்.
அன்றே அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டனர் தாயும் மகளும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக