திங்கள், 2 மார்ச், 2009
அன்று ஒரு நாள் நானும் கிரிஸ்த்தவ மதகுரு ஒருவரும் நண்பரொருவரை சந்தித்த விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.
அது ஒரு அமைதியான வீதி ஆள் நடமாட்டமே இல்லாத வீதி. நாங்கள் செல்லும் போது யாரும் இருக்கவில்லை அந்த வீதியில்!
தேவாலயத்தில் நடைபெற்ற விடயங்களைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டே வேனில் வந்துக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது ஒரு பெண் கையில் குழந்தையுடன் எங்களுடைய வானில் ஏற கையை நீட்டினாள்.
மிகவும் வேகமாக பயணித்துக் கொண்டிருந்ததனால் வேனை நாங்கள் நிறுத்தவில்லை.
சிறிது தூரம் சென்றவுடன் மற்றுமொரு இடத்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் நாங்கள் பயணித்த வேனிற்கு கையை நீட்டினாள் செய்வதரியாது மதகுருவும் வேனை நிறுத்தினார்.
பாவம் என்று சொல்லி வேனின் பின் ஆசனத்தில் இருத்திக் கொண்டார் அந்த பெண்ணை!
சிறிது தூரம் சென்றதும் மதகுருவின் உடம்பு வியர்த்துக் கொட்டியது. நானும் ஆச்சரியத்துடன் என்னவென்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று கூறிய அவர் தயவுசெய்து பின்னால் திரும்பாதே என்றார். அவ்வாறு சொல்லிக் கொண்டே வாகனத்தை செலுத்தினார்.
வேன் கட்டுப்பாட்டை இழப்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.
நானும் பின்னால் திரும்பாமல் வேனின் முன் கண்ணாடியில் மெதுவாகப் பார்த்தேன்...
அப்போது, பின்னால் குழந்தையுடன் அமர்ந்திருந்த அந்த பெண் குழந்தையை கடித்து உண்ணுவதை என் கண்ணால் கண்டேன்.
நான் கண்டு ஒரு சில விநாடிகளில் வேன் தீடீரென பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
அவ்வளவுதான் தெரியும். அடுத்த நாள் காலை வேனில் பார்த்தால் ஒன்றுமே இல்லை. கண்ணால் கண்ட சாட்சியத்தை பொய்யென்றோ பிரம்மை என்றோ என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக