வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
ஒரு தனியான பாதை, யாரும் அந்த பாதையில் மாலை 6 மணிக்கு பின்னர் செல்ல மாட்டார்கள். (இன்றும்)
மின்விளக்குகள் கூட அந்த பாதையில் இல்லை. மாலை 6 மணிக்கு பின்னர் இருள் சூழ்ந்த நிலையிலேயே காணப்படும் அந்த பாதை, பார்க்கவே பயமாக தான் இருக்கும். அப்போ எப்படி செல்வது.
இந்த பாதையில் சில வீடுகள் உள்ளன. அவர்கள் கூட அந்த பாதiயில் இரவு வேளையில் அதிகளவில் நடமாடமாட்டார்கள்.
இந்த பாதை முடிவடையும் இடம் தான் யாரும் இரவில் செல்லாததற்கான காரணம். பாதை முடியும் இடத்தில் அப்படி என்ன?
புதைக்குழி.
இரவு வேளைகளில் இந்த பகுதியிலிருந்த சத்தங்கள் கேட்பதாக அந்த பகுதியிலுள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி ஒரு நாள் அங்குள்ள ஒரு வீட்டில் திருமணம். இதற்காக முதல் நாள் இரவு வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அந்த வீட்டில் பலர் இரவு நேர வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களில் சிலர் அந்த பகுதிக்கு புதிது. அவர்களுக்கு தெரியாது அங்கு நடக்கும் செயற்பாடுகள். இவர்களில் சிலர் இரவு 9 மணியளவில் அந்த பாதையினூடாக சென்று மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சிறிய சத்தம். யாரோ இருவர் கதைத்துக் கொண்டிருப்பது போல. ஆனால் அவர்கள் அதை கணக்கெடுக்கவில்லை.
தொடர்ந்தும் நண்பர்கள் அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
தீடீரென ஒரு உருவம். அவர்களை நோக்கி வருவது போல. ஆனால் அதையும் அவர்களை யாரும் கணக்கெடுக்கவில்லை. யாரோ திருமண வீட்டிற்கு வருகின்றார்கள் என நினைத்து தொடர்ந்தும் அவர்களுடைய வேலைகளை ஆரம்பித்தனர்.
அவ்வாறு அவர்களை நோக்கி வந்த உருவம். சிறிது நேரத்தின் பின்னர் சற்று பெரியதாகி வந்தது. அதை கண்ட அவர்களுக்கு சிறிய சந்தேகம் தோன்றியப்போதிலும், அதையும் கணக்கெடுக்கவில்லை.
மீண்டும் அந்த உருவம் பாரியளவில் பெரிதாகி அவர்களை நோக்கி வந்ததை கண்ட அந்த குழுவினர் அங்கிருந்து எழுந்தனர்.
எழுந்த நிலையில் அந்த உருவத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, உருவம் அவர்களை நெருங்கியது. அப்போது தான் அவர்கள் அந்த உருவத்தின் முகத்தை பார்த்தனர்.
அந்த உருவத்தின் முகம் பார்க்கவே பயங்கரமாக இருந்ததுடன், எரிந்த நிலையில் காணப்பட்டது.
இதைகண்ட அவர்கள் அந்த பகுதியை விட்டு ஓட ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் திருமணம்.
முன்தினம் இரவு மது அருந்த சென்ற அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம் அனைவருக்கும் காய்ச்சல்.
இவர்களுக்கு ஏற்பட்ட இந்த காய்ச்சல் சுமார் 2 கிழமைகளுக்கு மேல் நீடித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றும் அந்த பாதை அப்படியே தான் இருக்கிறது. தயவு செய்து அப்படியான பாதைகளில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
janarthana sharma:"ungaluku aavigal meethu nambiki athigama?".
கருத்துரையிடுக