வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
பேய்கள் என்றாலே கூடுதலாக தனிமையான, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலேயே இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர்.
அப்படி தனிமையான இடங்களில் பேய்களை கண்டவர்கள் அதிகம் இருக்கின்றனர். அப்படி தான் எனக்கு தெரிந்த, இலங்கையில் மிக பிரசித்தி பெற்ற ஓர் இடம்! அந்த ஊரில் பேய்களின் நடமாட்டம் சற்று அதிகமாக தான் இருக்கும்.
அந்த ஊரில் இடம்பெற்ற ஓர் சம்பவத்தை தான் இந்த பதிவில் எழுதுகிறேன்.
குறித்த ஊரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் ஒரு சிறிய கிராமம்.
அந்த கிராமத்தில் தேயிலை செறிந்த காணப்படுவதுடன், வாழைத் தோப்புக்களும் காணப்படுகின்றன.
அத்துடன், அந்த ஊரில் சிறிய நீர் வீழ்ச்சியொன்றும் உள்ளதுடன், அதனை சூழ மூங்கில்கள் கூட்ட கூட்டமாக காணப்படுகின்றமை அனைவரது உள்ளங்களையும் கவரும் ஒரு இயற்கை காட்சி.
ஆனால், அந்த இயற்கையில் தான் மறைந்திருக்கும் ஓர் உண்மை சம்பவம்.
அந்த மூங்கில்கள் காணப்படும் இடத்தில் ஒரு தனி வீடு! அந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை.
மனிதர்கள் வாழ வேண்டிய வீட்டில் பிராணிகள் தான் வாழ்ந்து வருகின்றன.
இதற்கான காரணம் தான் அந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம்.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், அந்த வீட்டில் ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அழகான அம்சமான குடும்பம்.
இவர்களில் அந்த வீட்டில் சிறிது காலமே வாழ்ந்தனர். அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இப்படி பல பிரச்சினைகள் ஏற்பட்டதை அடுத்து அந்த குடும்பத்தில் தலைவியை தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து அந்த வீட்டில் இன்றும் அந்த பெண்ணின் நடமாட்டம் இருக்கின்றதாக தெரிவிக்கின்றனர் அப்பிரதேச மக்கள்.
இந்த பெண்ணின் கொலையை அடுத்து வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளனர் அந்த வீட்டின் உரிமையாளர்கள்.
இந்த நிலையில் குறித்த வீட்டில் வாடகைக்காக ஒருவர் மாத்திரமே வந்து தங்கியுள்ளார். முதலாம் நாள் இரவு. இந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறமை அவருக்கு தெரியாது. (யாருக்கும் தெரியாது)
நேரம் சுமார் 10 மணி இருக்கும். கடையில் வாங்கி வந்த இறைச்சியுடன் கூடிய உணவை உண்டு விட்டு நித்திரைக்கு சென்றுள்ளார் குறித்த நபர்.
11 மணியளவில் ஒரு சிறிய சத்தம் கேட்டுள்ளது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. மீண்டும் பெண்ணொருவர் அழுவது போல சத்தம் கேட்டுள்ளது. யார் இந்த இடத்தில் இந்த நேரத்தில் அழுவது என மனதில் நினைத்து படுக்கையிலிருந்து எழுந்து சென்றுள்ளார்.
பார்த்தால் யார் இல்லை. பின்னர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார்.
சரியாக நள்ளிரவு 12 மணி.
அய்யோ என்னை காப்பாற்றுங்கள் என ஒரு பெண்ணின் குரல். இவர் எழுந்து கையில் கிடைத்த இரும்பொன்றை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார்.
மீண்டும் அதே குரல் வீட்டிற்குள் கேட்டுள்ளது. வீட்டிற்குள் வந்து பார்த்தால், வெளியில் அந்த பெண்ணின் சத்தம். இப்படி மாற்றி மாற்றி சத்தம் கேட்டுள்ளது.
அப்போது தான் இவருக்கு ஓர் சந்தேகம்! இது நிச்சயம் பெண்ணின் குரல் இல்லை. இது ஆவிகளின் நடமாட்டமாக தான் இருக்கும் என மனதில் நினைவு.
அப்படியே வீட்டிற்குள் சென்று விட்டார். பின்னர் அன்று முழுநாளும் அவர் தூங்கவில்லையாம். அன்றிரவே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த நாள் வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவர் சென்று விட்டாராம்.
அன்றிலிருந்து இன்று வரை அந்த வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை.
இன்றும் அந்த வீட்டில் சத்தங்கள் கேட்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக