சனி, 15 ஆகஸ்ட், 2009
நமது வெற்றியின் செய்தி பிரிவில் கடமையாற்றும் லெனினின் உண்மை கதை!
இவரும் இவருடைய நண்பர்களும் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் புஸ்ஸல்லா பகுதியிலுள்ள போபிட்டிய பிரதேசத்தில் மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
அவர்கள் அந்த மரண சடங்கு வீட்டிற்கு வேன் ஒன்றிலேயே சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் வேனில் ஹட்டனை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் போது, வேனில் ஒரே பேய் கதைகளை கதைக் கொண்டே சென்றுள்ளனர்.
அப்போது அவருடைய நண்பனொருவன் ஒரு பகுதியை குறிப்பிட்டு அந்த இடத்தில் இரவு வேளையில் செல்லும் வாகனங்கள் தீடீரென நின்று விடுவதாக கூறியுள்ளார்.
இவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டு, பார்ப்போம் இன்று நாங்கள் அதே பாதையின் ஊடாக தானே செல்ல போறோம். என்ன நடக்குதுனு பார்ப்போம் என தெரிவித்துள்ளனர்.
சரியான அதிகாலை 2 மணி, குறித்த இடத்தை வேன் நெருங்கியுள்ளது.
யாரும் பாதையில் இல்லை. இருள் சூழ்ந்த நிலையில். பாதை அமைதியாக பேய்களை வரவேற்பது போல் காட்சியளித்தது.
குறித்த இடம். அவன் கூறியது போலவே எஞ்சின் தீடீரென செயலிழந்து வேன் வீசுப்பட்டு, உரு சுவரில் மோதி நின்றதாம்!
வேனில் எரிந்து கொண்டிருந்த அனைத்து மின்விளக்குகளும் அனைந்து, குறித்த இடமே இருளாயிற்றாம்.
சாரதி வேனை மீண்டும் ஸ்டாட் செய்ய முயற்சித்தும், வேன் ஸ்டாட் ஆகவில்லையாம்.
சுமார் அதே இடத்தில் சூரியன் உதிக்கும் வரை அவர்கள் அங்கேயே இருந்;துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த வேனில் இருந்த வேளையில் யாரோ வேனை தட்டுவது போலவும், வேனை தள்ளுவது போலவும் உணர்வுகள் தென்பட்டதாம்!
அன்று விடிந்தது. ஆள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. அப்போது அந்த பிரதேசத்தில் சென்றவர்களிடம் இவர்கள் விசாரித்துள்ளனர்.
அப்போது பிரதேச மக்கள் தெரிவித்ததாகவது:- இது அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற 5ஆவது சம்பவம் எனவும், இந்த பிரதேசத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் காலை வேளையில் வேன் ஸ்டாட் செய்தவுடன் ஸ்டாட் ஆகிவிட்டதாம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
மனப் பயம் இருந்தும் பயப்படாமல் வாசித்துப் பார்த்தேன்... (எனக்கும் நீண்ட கால ஆசை பேயைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று... செட்டாகவே மாட்டேன்கிறது அருண்....)
Super anna
கண்ணால் காண முடியாது எவராலும் ஆனால் உணர முடியும் உரையாடக்கூட இயலும் நீங்களும் அதுவும் ஏன் அனைவருமே பேய்கள்நான் என்ன எமக்கு உடல் உள்ளது அவர்களுக்கு இல்லை நீங்கள் சிந்தித்து பாருங்கள் உங்கள் உடல் இல்லாமல் உங்களால் எவற்றை எல்லாம் செய்ய முடியும் என்று
கருத்துரையிடுக