skip to main | skip to sidebar

WWW.TAMILGHOST.TK

உலகிலுள்ள இன்னுமொரு சக்தி!

  • Entries (RSS)
  • Comments (RSS)
  • Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit

செவ்வாய், 10 மார்ச், 2009

உயிருடன் வந்த நாய்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:52 AM

ஒரு பெண்! அவள் வீட்டில் தனது செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளாள்!

இப்படி சில காலங்கள் சென்றன. ஒரு நாள் அந்த நாய் தீடீரென இறந்துள்ளது.அதற்கான காரணம் கூட தெரியவில்லை.

அந்த நாயை வளர்த்த அந்த பெண்ணுக்கு கவலை தான்!

இந்த கவலையிலேயே சில நாட்கள் சென்றன....

ஒரு நாள் குறித்த பெண் வீதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளாகிய அந்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் வீடு திரும்பியுள்ளாள்.

வீடு திரும்பிய பெண் வீட்டிலுள்ள பூனையுடன் கட்டிலில் நித்திரையில் இருக்கின்றபோது.

அருகில் உயிரிழந்த அவளுடைய செல்லப்பிராணியான நாய்!

என்ன ஆச்சிரியம்! அந்த நாய் அவளுடைய அருகில் வந்து, அவளுடைய கழுத்திலுள்ள காயத்தை நாக்கால் தடவியுள்ளது.

சிறிது நேரம் அந்த பெண்ணின் அருகேயே நின்ற அந்த நாய், அப்படியே மறைந்து விட்டதாம்!

பெண்ணின் அருகிலிருந்த பூனையும் ஆச்சிரயமாய் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றது.

அவளுக்கோ ஆச்சரியம்! இன்னமும் அந்த நாயின் ஞாபகத்திலேயே இருக்கின்றாளாம் அந்த பெண்!
1 கருத்துகள்

திங்கள், 9 மார்ச், 2009

தலையில்லா நண்பன்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:39 PM

காலை 4.30 நிறுவனத்தில் யாரும் இல்லை! தனது காலை நேர வேலைக்காக சதுரங்க என்றவர் மாத்திரம் நிறுவனத்திற்கு வர!

அனைத்து மின்குமிழ்களும் அனைத்து, வெளிச்சமே இல்லை!

ஆனால் நிறுவனத்திலுள்ள தொலைகாட்சி மாத்திரம் வேலை செய்து கொண்டிருக்கின்றதாம்!

அவர் தொலைக்காட்சியின் அருகில் வந்து பார்த்த போது! தொலைக்காட்சிக்கு முன்னாள் உள்ள கணனியில் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டுள்ளார் சதுரங்க!

தன்னுடன் காலையில் வேலைக்கு வரும் நண்பன் என்று நினைத்து கொண்டு, அருகில் சென்றபோது!

என்ன ஆச்சரியம்!

அமர்ந்திருப்பவரின் தலையை காணவில்லையாம்! ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாராம் அவர்..

பின்னர் அருகில் சென்று கதிரையை திருப்பி பார்த்திருக்கிறார்! அப்போது கதிரையில் யாரும் இருந்திருக்கவில்லை!

பின்னர் சில நிமிடங்கள் கழித்தே உரிய நபர் வேலைக்கு வந்ததாக சதுரங்க எனக்கு கூறினார்.

தான் கண்டது நினைவாக இருக்கலாமென நினைத்துக் கொண்டிருந்து அவர், தற்போதே அது நினைவல்ல நிஜம் என்று உணர்ந்திருக்கிறார்.
1 கருத்துகள்

ஞாயிறு, 8 மார்ச், 2009

ஒரு விதமான மனம்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:29 AM

ஒரு அழகான சிறிய குடும்பம்! தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகியோரை கொண்ட சிறிய இந்த குடும்பம் வாழ்ந்து வந்தது.

இவர்களின் வீட்டிற்கு அருகில் ஒரு தனி வீடு, அங்கு வயோதிபர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்!

அவர் கூடுதலான நேரம், இந்த குடும்பத்தினருடன் தான் இருப்பார்!

வீட்டு தலைவர் வேலைக்குச் சென்று விடுவார், பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று விட்டால் வீட்டில் தலைவி மாத்திரமே!

அப்போது தனிமைக்கு அந்த வயோதிபர் அந்த வீட்டில் வந்து பேசிக் கொண்டிருப்பது வழமை!

இப்படியே காலங்கள் சென்றன!

ஒரு நாள் இந்த வீட்டிலுள்ளவர்கள் தமது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

சென்று சிறிது காலம் அங்கு தங்கியிருந்து விட்டு வரும்போது, அந்த வயோதிபர் உயிரிழந்து விட்டதாக கேள்வியுள்ளனர்.

மிகுந்த கவலைப்பட் அவர்களின் வாழ்க்கையில் நாட்கள் கழிந்தன.

சிறிது நாட்களின் பின்னர், வீட்டில் குறித்த சில அறைகளில் மாத்திரம் ஒரு விதமான மனம் வந்து கொண்டே இருந்திருக்கிறது.

இவர்கள் இதை பொருட்படுத்த வில்லை. எதாவது பழுதடைந்திருக்கும் என நினைத்துக் கொண்டனர்.

இந்த மனம் காலங்கள் சென்றும் ஒரே இடத்தில் மாத்திரம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

என்னவாக இருக்கும் என நினைத்த போதே அவர்களுக்கு மனதில் தோன்றியது உயிரிழந்த வயோதிபரை!

அவர் தமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவ்வாறு மனம் வீசும் இடத்தில் மாத்திரமே நின்று பேசுவார் என மனதில் தோன்றியது!

ஆனால், அந்த வீட்டில் பல அறைகளுக்கு அவர் சென்றதில்லை! அவ்வாறு செல்லாத அறைகளில் எந்த வித மனமும் இல்லை என வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போதே புரிந்து கொண்டனர் அந்த வயோதிபர் இன்னும் தம்முடன் இருக்கின்றார் என்று!

இந்த மனம் இன்றும் அந்த வீட்டில் இருக்கின்றதாம்!

தற்போது அந்த வயோதிபருடன் அவர்களின் காலம் செல்கிறது!
1 கருத்துகள்

வெள்ளி, 6 மார்ச், 2009

அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 1:48 PM

ஒரு அழகிய பழைமை வாய்ந்த மிக பெரிய வீடு! அதில் பல வருடங்களாக யாரும் வசிக்கவில்லை! அதற்கான காரணமும் தெரியவில்லை!

எனினும், ஒரு சிறிய குடும்பம் அந்த வீட்டை விலைக்கு வாங்கி அதில் குடியேறியது!

அந்த வீட்டின் வெளி தோற்றத்தை கண்டே, இவர்கள் இந்த வீட்டை விலைக்கு வாங்கி அங்கு குடியேறினர்.

எனினும், சிறிது காலம் எந்த விதமான பிரச்சினையுமின்றி மிக அழகாக அந்த குடும்பம் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தது.

இப்படி நாட்கள் சென்றன!

ஒரு நாள் குடும்பத்தில் இருக்கும் அங்கத்தவர்கள் தமது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

ஆனால், பாடசாலை செல்வதற்காகவும், தனது கல்விக்காகவும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனியாக அந்த வீட்டில் தங்கிவிட்டாள்!

உறவினர் வீட்டிற்கு செல்லவில்லை!

இரவு நேரம் வந்துவிட்டது! யாரும் இல்லை என்ற கவலையோ! பயமோ! இல்லாமல். தனது வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்!


சிறிது நேரத்தில் கழிவறைக்குச் சென்று வர அவள் கழிவறை செல்லும் போது, அவளுக்கு ஒரு பழக்கம்! கழிவறை செல்லும் முன் கைகளை கழுவுவது!

அன்றும் அதேபோன்று தனது கைகளை கழுவும் போது முன்னாள் உள்ள கண்ணாடியில், ஒரு உருவம் அவளுக்கு தென்பட்டது. தான் நிற்கும் இடத்திலுள்ள கதவிற்கு அருகேயே அந்த உருவம்!

அவள் பின்னாள் திரும்பி பார்த்து விட்டு அருகே சென்ற போது! என்ன ஆச்சிரியம்! அது ஒரு சிறுமி.

அந்த சிறுமி அரச பரம்பறையைச் சேர்ந்த சிறுமி போல!

அரச கால ஆடைகளை அணிந்துள்ளதுடன், அவளுடைய கூந்தல் சிவப்பு நிறமாகவும் இருந்துள்ளது.

அதை கண்ட வீட்டு சிறுமி அருகில் சென்றுள்ளாள்!

எனினும், அவள் அருகில் செல்ல செல்ல அந்த உருவமும் அப்படியே சென்று விட்டதாம்!

அப்போது தான் தெரிய வந்துள்ளது, அந்த வீட்டில் முன்னைய காலத்தில் வாழ்ந்தது. அரச குடும்பத்தினரென!

இந்த சிறுமி இன்றும் அந்த வீட்டில் வாழ்ந்து வருவதாக அந்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்

வியாழன், 5 மார்ச், 2009

வாழ்க்கையில் தான் காணாத பெண்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 8:38 AM

இரவு 11 மணி, யாரும் இல்லை! தனியாக நிறுனவத்தில் ஒருவர் மாத்திரம்!

சரி தேனீர் அருந்தி விட்டு வர நிறுவத்தின் உணவறைக்கு செல்ல தனது அறையை விட்டு வெளியே வந்தார் அவர்!

தான் வெளியேறும் கதவின் அருகில் ஒரு பெண் நிற்பதை கண்டார்!

அதுவும், தான் நிற்கும் இடத்திலிருந்து சாதாரணமாக 5 அடி தூரத்திலேயே அவள் நின்று கொண்டிருந்தாள்!

அந்த 11 மணிக்கு யார் நிறுவனத்தில்! அதுவும் கண்டு பலக்கப்படாத ஒரு பெண்! என மனதில் நினைப்பு!

அவளுடைய கண்கள் கூரிய கண்கள்! அப்படிப்பட்ட ஒரு கண்ணை அவன் வாழ்க்கையில் கண்டதில்லை!

சரி யார் என்று பார்ப்போம்! என நினைத்து கதவின் அருகில் வர முற்பட்ட போது அங்கிருந்து அந்த பெண் வெளியேறுவதை கண்ட அவர் விரைந்து அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது! ஒரு அதிர்ச்சி!

அதற்குள் அவளை காணவில்லை! தேடி பார்த்தும் யாரும் இல்லை!

அங்கிருந்தவர்களிடம் கேட்ட போது! அப்படி யாரையும் நாங்கள் காணவில்லை என்று கூறியுள்ளனர்.

அன்று கண்ட பெண்! வாழ்க்கையில் தான் காணாத பெண்!
0 கருத்துகள்

செவ்வாய், 3 மார்ச், 2009

ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:57 AM

பல வருடங்களுக்கு முன்னர், ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தை பார்வையிடும் பணியில் ஈடுபட்டுள்ள உத்தியோகஸ்தர் தண்டவாளம் வழியாக நடந்து வண்ணம் தனது கடமையில் ஈடுபட்டிருந்தார்.

இப்படி சிறிது தூரம் நடந்து வந்து கொண்டிருந்த அவர், தண்டவாள பாலத்தை அண்மித்தார்.

அப்போது தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒருவன் தண்டவாள இரும்பை கழற்றிக் கொண்டிருப்பதை இவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே அந்த இடத்தை அண்மிக்க, அவன் அந்த இரும்பை கழற்றிய வண்ணமே இருக்கின்றான்!

இவர் யாரது என்ற கேட்டுக் கொண்ட அருகில் சென்ற போதும் அவன் திரும்பி பாராது தண்டவாள இரும்பை கழற்றிக் கொண்டே இருக்கிறான்.

கோபம் கொண்ட உத்தியோகஸ்தர் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தனது வலது கையால் அவனை தாக்கியதை அடுத்து அங்கு இரும்பை கழற்றிக் கொண்டிருந்த அவன் தீடீரென மறைந்து விட்டான்!

இவர் தனது சக்தியை பயன்படுத்தி தாக்கி வேகம் தனது வலது கை இரும்பு பாலத்திலேயே மோதியுள்ளது.

அன்று பாதிக்கப்பட்ட கை இன்று வரை செயழிலந்தே காணப்படுகிறது.

இன்று அவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது!
0 கருத்துகள்

திங்கள், 2 மார்ச், 2009

வேனை நிறுத்திய பெண்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 2:44 PM

அன்று ஒரு நாள் நானும் கிரிஸ்த்தவ மதகுரு ஒருவரும் நண்பரொருவரை சந்தித்த விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அது ஒரு அமைதியான வீதி ஆள் நடமாட்டமே இல்லாத வீதி. நாங்கள் செல்லும் போது யாரும் இருக்கவில்லை அந்த வீதியில்!

தேவாலயத்தில் நடைபெற்ற விடயங்களைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டே வேனில் வந்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது ஒரு பெண் கையில் குழந்தையுடன் எங்களுடைய வானில் ஏற கையை நீட்டினாள்.

மிகவும் வேகமாக பயணித்துக் கொண்டிருந்ததனால் வேனை நாங்கள் நிறுத்தவில்லை.

சிறிது தூரம் சென்றவுடன் மற்றுமொரு இடத்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் நாங்கள் பயணித்த வேனிற்கு கையை நீட்டினாள் செய்வதரியாது மதகுருவும் வேனை நிறுத்தினார்.

பாவம் என்று சொல்லி வேனின் பின் ஆசனத்தில் இருத்திக் கொண்டார் அந்த பெண்ணை!

சிறிது தூரம் சென்றதும் மதகுருவின் உடம்பு வியர்த்துக் கொட்டியது. நானும் ஆச்சரியத்துடன் என்னவென்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று கூறிய அவர் தயவுசெய்து பின்னால் திரும்பாதே என்றார். அவ்வாறு சொல்லிக் கொண்டே வாகனத்தை செலுத்தினார்.

வேன் கட்டுப்பாட்டை இழப்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

நானும் பின்னால் திரும்பாமல் வேனின் முன் கண்ணாடியில் மெதுவாகப் பார்த்தேன்...

அப்போது, பின்னால் குழந்தையுடன் அமர்ந்திருந்த அந்த பெண் குழந்தையை கடித்து உண்ணுவதை என் கண்ணால் கண்டேன்.

நான் கண்டு ஒரு சில விநாடிகளில் வேன் தீடீரென பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

அவ்வளவுதான் தெரியும். அடுத்த நாள் காலை வேனில் பார்த்தால் ஒன்றுமே இல்லை. கண்ணால் கண்ட சாட்சியத்தை பொய்யென்றோ பிரம்மை என்றோ என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
0 கருத்துகள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

Sponsored

  • banners
  • banners
  • banners
  • banners

Blog Archive

  • ▼  2010 (3)
    • ▼  ஜூலை (1)
      • இரத்தக் கண்ணீர்!
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (1)

Followers

Blogger இயக்குவது.

About Me

எனது படம்
R.ARUN PRASADH
SRI LANKA,
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
free counters

Blog Archive

  • ▼  2010 (3)
    • ▼  ஜூலை (1)
      • இரத்தக் கண்ணீர்!
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (1)
 

© 2010 My Web Blog
designed by DT Website Templates | Bloggerized by Agus Ramadhani | Zoomtemplate.com